நான் பொய் சொல்லல, சத்தியமா எனக்கே தெரியாது: தளபதி 64 பட நடிகர் உருக்கம்

தளபதி 64 படத்தில் புதிதாக சேர்ந்துள்ள அர்ஜுன் தாஸ் போட்ட உருக்கமான போஸ்ட்டை பார்த்து விஜய் ரசிகர்கள் இம்பிரஸ் ஆகிவிட்டனர்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 64 படத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிப்பதாக இருந்தது.


இந்நிலையில் அவருக்கு பதிலாக கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளார். தளபதி 64 படத்தில் சேர்ந்துள்ள அவருக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அர்ஜுன் தாஸ் தளபதி 64 பற்றி இன்ஸ்டாகிராமில் உருக்கமாக போஸ்ட் போட்டுள்ளார்.


பேச்சே வரவில்லை


அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் கூறியிருப்பதாவது, செய்தி வெளியானதில் இருந்து பேச்சே வரவில்லை. முழுமனதுடன் எதையாவது விரும்பினால் அது நடக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் இது நடக்கும் என்று, அதுவும் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. விஜய் சார் மற்றும் விஜய் சேதுபதி சாருடன் நடிப்பதில் மகிழ்ச்சி. அதுவும் புதிதாக நடிக்க வந்துள்ள எனக்கு இது பெரிய மோடிவேஷன் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.