கண்ணாமூச்சி காட்டும் நிழல்.. சிவலிங்கத்தின் பின்னால் இப்படி ஒரு அதிசயம்! கோவிலுக்கு எப்படி செல்வது?

இந்தியா ஆன்மீகமும், அரசியலும் இரண்டற கலந்து உலகம் முழுக்க சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட இந்திய திரு நாட்டில் அமானுஷ்யங்களுக்கும் ஆச்சர்யங்களுக்கும் இன்ப அதிர்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


அப்படிபட்ட ஆன்மீக பூமியில் சிவலிங்கத்துக்கு பின்னால் வீறு கொண்டு எழுந்து நிற்கும் ஒரு அதிசய நிழல் பற்றியும், அந்த கோவிலுக்கு எப்படி செல்வது, அருகே அமைந்துள்ளது சுற்றுலாத் தளங்கள் எவை எவை என்பன பற்றியும் இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்.



மன்னர்கள் கட்டிடம் கட்டும்போது அவர்களின் கட்டிடக் கலை நுணுக்கங்களையும், யாரும் அறியாத பல ரகசியங்களையும் உள்ளே வைத்தே கட்டுகிறார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக சோழர்கள் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை குறிப்பிடலாம். அதுபோலவே அதிசயமும் மர்மங்களும் நிறைந்ததுதான் நாம் செல்ல போகும் சாயா சோமேஸ்வரா கோவிலும். எங்குள்ளது, எப்படி செல்வது, அருகாமையில் காணவேண்டிய இடங்கள் என இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.




​எங்குள்ளது?



தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலிருந்து சரியாக 100 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நல்கொண்டா நகரம். இங்குதான் பல அதிசயங்கள் நிறைந்த சாயா சோமேஸ்வரா கோவில்