மற்றொரு இடமான நந்துர்பார் காங்கிரஸிடம் இருந்தது. இருப்பினும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தமுள்ள 332 இடங்களில் பாஜக 103 இடங்களில் வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் 74 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கடுத்து காங்கிரஸ் 73, தேசியவாத காங்கிரஸ் 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சிவசேனாவை பொறுத்தவரை 36 இடங்களில் இருந்து 46ஆக வெற்றி அதிகரித்துள்ளது. ஆனால் காங்கிரஸை பொறுத்தவரை 100ல் இருந்து 73ஆக வெற்றி சரிந்துள்ளது.
பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியானது ஒரேவொரு இடத்தில்(அகோலா) வென்றுள்ளது